பயிர்
பயிர் (நெல்)
சிறு காற்றுக்கொ வெயிலுக்கு சாய்ந்து வாடிய பயிரை கண்டு வாடிய மனிதா நான் தலை நிமிர்ந்து வளர்ந்த என் நிலம் எங்கே. மலடாய் போன என் மண்ணைக் கண்டு மணம் உடைந்து போனேன் மனிதாநீர் உண்டு நிலம் உண்டு என்னால் உனக்கு நிழல் உண்டு என இருந்த என் காலம் எங்கே?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அசுத்தமான காற்றே. நீங்கள் சுவாசிக்க சுத்தமான காற்றை நாங்கள் தந்தோம் இன்று நான் மூச்சு விட முடியாமல் தவிக்கிறேன். விதைத்தால் நிச்சயமாக முலைப்பேன் என்று தெரிந்தும் லாபத்திற்காக இந்த சத்து இல்லாத பயிரினை பயிர் செய்யும் மானிடா
ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் மாதாந்திர வலியும் இளமையில் முதுமை தோற்றமும் இவையனைத்தையும் உணராத மனித மிருகமா நீ..
நிலம் எல்லாம் கட்டிடங்களாக மாறின உணவே மருந்து என இருந்த காலம் ஓடின . நிழல் உண்டு உறங்க இடமுண்டு பசியார உண்ன கனி உண்டு என வாழ்ந்த வாழ்க்கை எங்கே?
அரை அடி ஆழம் தோண்டி மரம் வைத்திருந்தால் ஆயிரம் அடி தோண்ட வேண்டிய அவசியம் இல்லை
எனக்கு தேவையான உணவையும் பிறருக்கு தேவையான உணவையும் கடமையாக உற்பத்தி செய்யும் என்னை அழிப்பதே கடமையாக கொண்ட மானிதா
சற்று சிந்தித்து உன்னையே நீ கேட்டுப்பார்
நீ நாகரிக நஞ்சினை உணவாய் எடுத்து கொள்கிறாய்
பணத்திற்காக பாசமிகு குழந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்திகிறாய்
உன்னால் அழிந்தது இந்த யுகம்
புதிதாய் பிறக்கட்டும் நம் யுகம்
விதையின் வேதனைகள்
இப்படிக்கு உங்கள்
Raj Gubendra
Comments
Post a Comment